பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைக்கக்கோரி பலரும் தெரிவித்து வந்த நிலையில் அண்மையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து அறிவித்தது. ஆனால் இதனை பல மாநிலங்கள் செயல்படுத்தவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இந்த கலால் வரி குறைப்பு உத்தரவை அமல்படுத்தவில்லை.
இந்நிலையில் நாடு முழுவதும் மீண்டும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான மத்திய அரசின் கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு மக்களுக்கு கொஞ்சம் நிம்மதியை தரும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த முறை மாநில அரசுகள் இந்த அறிவிப்பை செயல்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.