இந்தியாவில் 24 வாரம் வரையிலான கருக்கலைப்பு சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே கருக்கலைப்பு அதிகமாக பதிவாகியுள்ளது. பெண்கள் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் கருக்கலைப்பு செய்கிறார்கள். ஆனால் அதற்கும் சில சட்ட திருத்தங்கள் உள்ளன. அதன்படி குறிப்பிட்ட வாரத்தில் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதி உள்ளது.
இந்நிலையில் 24 வாரம் வரையிலான கருக்கலைப்புக்கு அனுமதி தரும் சட்ட திருத்தத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 20 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதி இருந்த நிலையில், மேலும் நான்கு வாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் மற்றும் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானவர்கள் கருவுற்றால் சிசுவை கலைக்க இதனால் அனுமதி கிடைக்கும் என கூறியுள்ளது.