Categories
மாநில செய்திகள்

BREAKING : பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

பெரியார் பிறந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு பேசியதாவது, சமூகநீதி கதவைத் திறந்தது பெரியாரின் கைத்தடி.. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். செப்டம்பர் 17 சமூகநீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும்..

சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி தமிழகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார் என்றும், அவர் பேசிய பேச்சுக்கள், எழுதிய எழுத்துக்கள் யாரும் எழுத தயங்கியவை என்று புகழாரம் சூட்டினார். அவர் நடந்த நடை, நடத்திய சுற்றுப்பயணம் மாநாடு போன்ற பெரியாரின் செயல்கள் குறித்து பேச வேண்டும் என்றால் சட்டப்பேரவையை  10 நாட்கள் ஒத்தி வைத்துவிட்டு தான் பேச வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்

 

Categories

Tech |