தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், அதனால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று உருவாகும் என கூறப்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. அதற்கான சாத்தியக் கூறு தற்போது இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே உருவாக வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகி இரண்டு நாளில் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
Categories