Categories
உலக செய்திகள்

BREAKING: பெரும்பான்மையை இழந்து கவிழும் இலங்கை அரசு…. வெடித்தது போராட்டம்….!!!!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது. இந்நிலையில்  கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 ஆயிரம் பேர் திரண்டனர். அவர் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் அறிவித்தார். அவசர நிலை அறிவிக்கப்பட்டதன் மூலமாக நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவசர நிலை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதை அடுத்து இலங்கையில் ஆளும் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை 40 எம்பிகள் திரும்பப் பெற்றதால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் ஆளும் கட்சியான எஸ்.எல்.பி.பி கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக இலங்கையில் 26 அமைச்சர்களும் பதவி விலகிய நிலையில் மாற்று கட்சியினர் யாரும் புதிய பதவிகளை ஏற்க முன்வரவில்லை. இதனிடையே அதிபர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகக் கோரி போராட்டம் வெடித்துள்ளது.

Categories

Tech |