ஜப்பானில் புகுஷிமா அருகே பசிபிக் பெருங்கடலில் 7.0 என்ற ரிக்டர் அளவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 2011 புகுஷிமாவில் சுனாமி ஏற்பட்டு 18,000 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களில் நியூசிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் வந்த நிலையில் தற்போது ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.
Categories