Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பெரும் பரபரப்பு…..! மாஜி அமைச்சர் வீட்டில் ரெய்டு… கதிகலங்கும் அதிமுக …!!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த வழக்கு பதிவை தொடர்ந்து அவருக்கு சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் இருக்கக்கூடிய அவருடைய வீடு உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றார்கள்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி மற்றும் அவருடைய சொந்த ஊரான புதுக்கோட்டை என 43 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எம் ஆர் விஜயபாஸ்கர்,  கே சி வீரமணி, எஸ் பி வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |