பெங்களூர் சிறையில் இருந்து வந்த சசிகலா இபிஎஸ் ஓபிஎஸ் க்கு எதிராக சாட்டையை சுழற்றுவார் என்று எதிர்பார்த்து இருந்த சமயத்தில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். இது பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அப்படியே சில காலம் ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது அவ்வப்போது சில அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தா.ர் இந்த சந்திப்பு நேற்று மாலை நடைபெற்றதாகவும், இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்தின் மனைவி லதா உடன் இருந்ததாகவும் சசிகலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்து ரஜினிகாந்தை நலம் விசாரிப்பதற்காகவும், கலை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் சசிகலா சென்று இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.