தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி பாதிப்பு குறைவான 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 28ஆம் தேதி வரை புதிய தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டத்திற்குள் போது பேருந்து போக்குவரத்து அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங் களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளித்துள்ளது. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமலும், 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு இடத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு பயணம் செய்வதற்கான அரசு பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே ரூ.1000 பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதி வரை செல்லும் என அறிவித்த நிலையில், சீசன் பஸ் பாஸ்க்கும் சலுகை வழங்கியுள்ளது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழக மையங்களில் ரூ.1000 பஸ் பாஸ் ஜூன் 26ஆம் தேதி வரை பெறலாம் என தெரிவித்துள்ளது.