தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் நாளை முதல் முழு அளவில் பேருந்து சேவை தொடங்க உள்ளது. இந்நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க டிரைவர், கண்டக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் பயணிகள் முக கவசம் போட்டுள்ளார்களா என்பதை ஆய்வு செய்ய குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்த குழுவினர் வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பயணிகளுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.