Categories
மாநில செய்திகள்

Breaking: பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி நாளை மாலைக்குள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை முடிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. அதனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை கருத்து கேட்பு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாள் ஒன்றுக்கு நூறு பெற்றோர்களிடம் எழுத்துப்பூர்வமாக கருத்து கேட்பு நடத்தப்படும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பெற்றோரை அழைத்து கருத்து கேட்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து நாளை மாலைக்குள் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தி முடிக்க முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் 8ஆம் தேதி வரை கருத்து கேட்க அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாக நாளைக்குள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும். பெற்றோர்களிடம் பெறப்பட்ட கருத்துக்களை தலைமை ஆசிரியர்கள் நாளை மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |