Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கலுக்கு ரூ.5,000 ரொக்கத்துடன், முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!!

பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூகவலைத்தளங்களிலும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில் இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் ரூபாய் 1,000 வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக்கு பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/ – வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கரும்பு விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு அறிவிப்பில் பொங்கல் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்காத திமுக அரசுக்கு, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என விவசாயிகள் காத்திருந்த நிலையில், அவர்கள் தலையில் இடி விழுந்தது போல் உள்ளது.

மேலும் தைப்பொங்கல் என்றாலே மக்களின் நினைவுக்கு வருவது செங்கரும்பு தான், பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |