Categories
மாநில செய்திகள்

BREAKING: பொங்கல் சிறப்பு பேருந்து…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனையை போக்குவரத்து துறை அமைச்சர் சற்று நேரத்திற்கு முன்பு மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 16 ஆயிரத்து 768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஜனவரி 11 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மொத்தம் 10, 300 பேருந்துகள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து ஜனவரி 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை 6,468 பேருந்துகள் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி, கேகே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |