Categories
மாநில செய்திகள்

#BREAKING : பொங்கல் பரிசு – ரூ.1,000 வழங்க ரூ 2,356 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.!!

பொங்கல் பரிசு ரூ. 1000 வழங்க ரூ 2,356 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசு.

2023ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பில் ரூபாய் 1,000 வழங்குவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/ – வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைப்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட 2, 356 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |