Categories
மாநில செய்திகள்

Breaking: பொங்கல் பரிசு ரூ.2500 பணம்… தமிழக அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் நியாய விலை கடை தொடர்பு இல்லாத நபர்களை பொங்கல் பரிசு மற்றும் பணம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு சேர்த்து 2500 ரூபாய் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த  மாதம் 26ம் தேதி முதல் தொடங்கி 30 ஆம் தேதி நிறைவடைந்தது.

இதனையடுத்து ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படுகிறது. .

இந்நிலையில் பொங்கலுக்கு முன் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற முடியாதவர்கள் ஜனவரி 19ஆம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு அறிவித்துள்ளார். ஜனவரி நாடு முதல் 13-ஆம் தேதி வரை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி பெறலாம் என்றும் காலையில் 100 பேருக்கும் மதியம் 100 பேருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எக்காரணத்தைக் கொண்டும் நியாய விலை கடை க்கு தொடர்பு இல்லாத நபர்களை பொங்கல் பரிசு, பணம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என உணவு வழங்கல் துறை ஆணையாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |