தமிழகத்தில் கோவில் ஊழியர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் பணம் வழங்கி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் ஊழியர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி 2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை 240 நாட்கள் பணியாற்றிய, முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் மற்றும் முதுநிலை முதுநிலை அல்லாத அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும். இருநூற்று நாற்பது நாட்களுக்குள் பணியாற்றுபவர்களுக்கு பணிபுரிந்த நாட்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.