Categories
மாநில செய்திகள்

BREAKING : பொங்கல் ரொக்கப்பணம் கிடையாது….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

ரேஷன் கடையில் தரப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான புதிய அரசாணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற ரேஷன் பொருள்களும்,  இலவச சேலை, வேட்டி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏற்கனவே வெளியான பழைய சுற்றறிக்கையில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் என்று குறிப்பிட்டிருந்தது. தற்போது வெளியான புதிய சுற்றறிக்கையில் ரொக்கப்பணம் என்ற வார்த்தை நீக்கப்பட்டு, பொங்கலுக்கு பணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணம் கிடையாது என்ற அறிவிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |