நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே இரண்டாம் தேதி 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
எனவே கொரோனா காரணமாக மே 2 ஆம் தேதி பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் வாக்கு எண்ணும் மையங்களில் பொதுமக்கள் வரக்கூடாது. வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.