Categories
மாநில செய்திகள்

BREAKING :  பொது இடங்களுக்கு செல்ல தடை…. அதிரடி உத்தரவு….!!!! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதி கிடையாது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது: “தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, தியேட்டர்கள் ,வணிக வளாகங்கள், சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட 18 இடங்களுக்கு செல்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களுக்கு வருவோர் தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தியை காண்பிக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Categories

Tech |