Categories
மாநில செய்திகள்

BREAKING : பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல்…. வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி..!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி.

சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி. 2. 10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நிலையில் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 20 முதல் 23 வரை 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவு, சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது 1.69 லட்சம் மாணவர்களின் பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. www.tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

Categories

Tech |