அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோதவாடி கிராமத்தில் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 25 பேர் கொரோனா தடுப்பு விதிகளை மீறி கூட்டம் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி கூட்டம் சேருதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Categories