திமுகவைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாகுகின்றனர்.
அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது..
இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல்நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.