Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

BREAKING : போதை பார்ட்டி… நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேர் கைது… போலீசார் அதிரடி!!

மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் அமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் அந்த கப்பலை சுற்றி வளைத்து, நேரடியாக சென்று பார்த்தபோது அவர்கள் தடை செய்யப்பட்ட கோகைன், ஹர்ஷிஷ்   எம்.டி உள்ளிட்டபோதை பொருட்களை பயன்படுத்தி அந்த பார்ட்டியில் ஈடுபட்டது தெரிய வந்திருக்கிறது..

இது தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில், இன்று காலை மும்பை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் அமீர் வான்கடே பேட்டியளித்தார். அப்போது அவர், கோகைன், ஹர்ஷிஷ்  எம்.டி உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது.. பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களுடைய தொலைபேசி முதற்கட்டமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

நேற்றைய தினம் நடைபெற்ற அந்த கப்பல் பார்ட்டியில் குறிப்பாக ஒரு நபரிடம் இருந்து 60 ஆயிரம் இல் இருந்து 1 லட்சம் வரை தொகையானது வசூலிக்கப்பட்டுள்ளது.. அதேநேரம் அவர்களிடமிருந்து போதை பொருட்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் தொடர்பாக பதிலளிக்க தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு நேரடியாக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம், திரை துறை பின்னணியில் இருக்கக்கூடிய நபர்கள் இந்த பார்ட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையே வேறு யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது.. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பான மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சுமார் 20 மணி நேரம் விசாரணைக்கு பின் ஆரியன் கான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தது மும்பை போலீஸ்..

Categories

Tech |