புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முடி அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரியில் அதிமுகவின் முழு அடைப்பு போராட்டத்தால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்துகள் காலை 6.30 மணி முதல் நிறுத்தப்பட்டன. அதனைப் போலவே காஞ்சிபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு, செங்கல்புறத்தில் இருந்து புதுச்சேரி, நாகை மற்றும் கடலோர் இயக்கப்பட்ட பேருந்துகள், திருவாரூரில் இருந்து புதுச்சேரி இயக்கப்பட்ட பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.