போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கஞ்சா வைத்திருந்ததாக காவல் நிலையம் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் உயர்ந்துள்ளார். புரசைவாக்கம் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்தனர். குற்ற வழக்குகள் உள்ள திருவல்லிக்கேணி ரமேஷ் மற்றும் பட்டினபக்கம் விக்னேஷ் ஆகியோரை விசாரித்தனர்.
விக்னேஷிடம் முதலில் அயனாவரம் காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட விக்னேஷ்க்கு அதிகமாக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறுகின்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவர் மரணம் அடைந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.