சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ஞாயிற்றுக் கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடத்தப்படும். தமிழகத்தில் தான் இலவச தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய சூழல் தற்போதைக்கு இல்லை. தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும் என்று தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் பரவி வருவதால் சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.