மகாராஷ்டிரா மாநிலத்தின் மேலும் ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வகைகள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பை மகாராஷ்டிரா சுகாதார துறை அறிவித்துள்ளது. இன்று பாதிப்பு உறுதியான 7 பேரில் 4 பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் எஞ்சிய மூன்று பேர் வெளிநாட்டில் சுற்றுலா சென்று வந்த உடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது வரை ஒமைக்ரான் உறுதியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது .
Categories