தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை நகரமே தத்தளித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை மக்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். வரும் 10 ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சியில் அதிகனமழை பெய்யும். 11ஆம் தேதி சென்னை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது.