Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மக்களே அரிய வாய்ப்பு… விருப்ப மனு தரலாம்… அதிமுக அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு தரலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் அதிமுக கடந்த சில நாட்களாக பல்வேறு திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனு தரலாம் என அதிமுக அறிவித்துள்ளது. விருப்ப மனுவுக்கு தமிழ்நாட்டில் 15000, புதுச்சேரியில் 5 ஆயிரம், கேரளாவில் 2000 கட்டணம் வசூலிக்கப்படும். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளது.

Categories

Tech |