Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மக்களே பயம் வேண்டாம்…. ஒரே நாளில் 2,59,168பேர் குணம்… இந்தியாவில் கொரோனா ரிப்போர்ட்…!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகின்றது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றோடு நாட்டில் 3அலை அனைத்து மாநிலங்களிலும் வேகம் எடுத்து வருவதால் மத்திய – மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய தின பாதிப்பை விட  4,171 எண்ணிக்கையில் குறைவாகும். புதிதாக 525 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,59,168 பேர் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளனர்.

தற்போது 21,87,205 பேர் சிகிச்சையில் இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை, கொரோனா பாசிட்டிவ் விகிதம் 17.78%ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதே போல இந்தியாவில் 1,61,92,84,270 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |