Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மக்களே மீண்டும் “மாஸ்க்”…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததன் காரணமாக படிப்படியாக குறைந்தது. இதனால் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா படிப்படியாக அதிகரிக்க தொடங்கி இருப்பதால் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவ துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு 25 கீழே இருந்த நிலையில் நேற்று 30 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொது இடங்கள் மற்றும் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மக்கள் முக கவசம் அணிந்து கொள்வதை உறுதி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |