தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் கருப்பசாமி நகரில் மின்னல் தாக்கி கட்டடத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து நிலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனவே இடி மின்னலுடன் மழை பெய்யும் போது மக்கள் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். ஒருவேளை வெளியே இருந்தால் பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி நிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories