இலங்கையில் வரலாறு காணாத நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தத் தொடங்கினர். இந்நிலையில் அதற்கு ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று மக்கள் கோஷங்களை எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்துள்ளது.
இலங்கையில் இரண்டாவது நாளாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டால் பெரும் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச டுவிட்டர் பதிவில், போராட்டத்தை கைவிட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். . மேலும் அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார நெருக்கடியை தீர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.