நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி துணைத் தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பெரிய தோல்விக்கு பிறகும் மக்கள் நீதி மையம் தலைவர் தலைவர் கமல் தனது அணுகுமுறையை மாற்றுவார் என்று நம்பிக்கை இல்லை என மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு துணைத் தலைவர் பொன்ராஜ், பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே குமரவேல், முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோரும் பதவியையும் ராஜினாமா செய்துள்ளனர்.