சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறு சுங்கச்சாவடியின் ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மஞ்சள் கோட்டை தாண்டி வாகனங்கள் வரிசை பிடித்து நின்றால் அனைத்து வாகனங்களையும் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சுங்கச்சாவடியை கடக்கவும், தடைக்கம்பியை உயர்த்தவும் 10 வினாடிகளுக்கு அதிகமாக நேரம் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
Categories