புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே விரா சிலையில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் போட்டியில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் அனுமதி இன்றி நடந்து வந்த மஞ்சுவிரட்டு போட்டியை உடனே நிறுத்த வேண்டும் என்று வட்டாட்சியர் பிரவீனா மேரி உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப் பட்டால் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Categories