Categories
மாநில செய்திகள்

BREAKING : மதுரை ஆவினில் முறைகேடு…. ராஜேந்திர பாலாஜிக்கு தொடர்பா…? தொடரும் விசாரணை….!!!!

இந்நிலையில் மதுரையில் ஆவின் முறைகேட்டில் ராஜேந்திரபாலாஜிக்கு தொடர்பு உள்ளதா? என்று ஆவின் லஞ்ச ஒழிப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவின் துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பால்வளத்துறை அமைச்சர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இதுவரை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருப்பினும் காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும், ராஜேந்திரபாலாஜி உதவியாக இருந்த 2 அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பதி லட்டு தயாரிக்கும் பணிக்கு நெய் அனுப்பியதில் முறைகேடு என்ற புகாரில் ஆவினில் விசாரணை, சோதனை நடந்தது . விசாரணையில் தனியார் நிறுவனங்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் நெய் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இதனால் இந்த மோசடிக்கும், ராஜேந்திரபாலாஜிகும் தொடர்பு உள்ளதா? என்ற அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |