மத்திய அமைச்சராக எல் முருகன் பதவியேற்றுக்கொண்டார்.
தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுகிறார் என்றும், ஒன்றிய அமைச்சராக இன்று மாலை பதவியேற்றுக் கொள்வார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இதையடுத்து புதியதாக பதவியேற்கவுள்ள 43 பேர் கொண்ட மத்திய அமைச்சரவைப் பட்டியல் வெளியானது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயர் இடம்பெற்றிருந்தது.
அமைச்சரக விரிவாக்க பட்டியலில் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுக்கு இடம் கிடைக்கும் என தகவல் வெளியான நிலையில், அமைச்சரவை பட்டியலில் 42வது இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் பதவி ஏற்பு விழாவில் எல் முருகன் தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகிக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் 15 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர். தமிழ்நாடு பாஜகவின் மாநில தலைவராக தற்போது பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.