மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் இன்று அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அவர் மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் என்ன உடல்நல பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை.. விவரம் பின் தெரியவரும்.
Categories