தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் தன் டுவிட்டரில் வெளியிட்டார். இதில் சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகள், ஓசூர், மயிலாடுதுறை, பொள்ளாச்சி, பரமக்குடி, நாகை நகராட்சிக்குட்பட்ட 154 வேட்பாளர்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.