தமிழம் , அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட தொகுதிகளில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. அனைத்து தொகுதிகளிலும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தொகுதிகளில் இறுதிகட்ட வாக்கு எண்ணிக்கையும், சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா நந்திகிராமம் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக அவர் 1957 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து விட்டதாக அதிர்ச்சி தரும் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து தோல்வியை ஒப்புக் கொள்வதாக மம்தா அறிவித்துள்ளார்.