Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மயிலாடுதுறை மாவட்டத்திலும்…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர்.

தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |