நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டு தெருவில் வீட்டினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூதாட்டி பெரியம்மாள் (73) மற்றும் தில்லை குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல் நிலையும் சற்று மோசமாக இருப்பதாககூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடிப்பு குறித்து வட்டாட்சியர் ஜானகி மற்றும் டிஎஸ்பி சுரேஷ் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பட்டாசு வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. ஏற்கனவே உயிரிழந்த தில்லைகுமாரின் தாய் செல்வி மற்றும் மனைவி பிரியங்கா சடலம் இடுப்பாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் வலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.