தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி ஜிகா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் பயணிகளின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு முகவரிகள், தமிழகத்தில் அவர்கள் எங்கு தங்குகின்றனர் என்ற விவரங்கள் கேட்டு அறியப்படும். மறு உத்தரவு வரும் வரை இந்த பரிசோதனை முறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.