Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும் வரை…. நாளை முதல் பள்ளிகள் மூடல்…!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அலட்சியமாக இருக்கக்கூடாது.

காற்று மாசுபாடுக்கு விவசாயிகளின் வேளாண் கழிவுகள் மட்டுமே காரணம் என்று கூறுவது முறையானது அல்ல. வேளாண் பயிர்க்கழிவுகள் எரிப்பைப் பொறுத்தவரை, இரண்டு மாதங்களைத் தவிர அதிகம் இல்லை. விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது 10 சதவிகிதம் தான், வாகனம், தொழிற்சாலை, கட்டுமான பணி, மின்சாரம் போன்றவைதான் மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்கள் என்று தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் வேண்டுமென்றால் ஊரடங்கு அமல்படுத்தி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியதின்பேரில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தி டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு  கடந்த 15ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால் முகக்கவகசம் அணிந்து மாணவ/மாணவிகள் வகுப்புகளுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  இந்நிலையில் காற்று மாசுபாடு அதிக அளவில் இருக்கும் போது டெல்லியில் பள்ளியைத் திறந்தது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் டெல்லி அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |