இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் மக்கள் கடுமையான கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வரும் 22ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9,10,11 ஆகிய வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து புதுச்சேரியிலும் 9,10,11 மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.