நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான பத்மஸ்ரி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து அவரின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது.