சீனாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 133 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் போயிங் 737 விமானம், 133 பயணிகளுடன் பறந்தது. இந்நிலையில் குவாங்சி மாகாணத்தில் ஊஸோ என்ற இடத்தில் விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் உயிரிழப்புகள் பற்றி முழுமையான தகவல் வெளியாகவில்லை. இந்த விபத்து செய்தி வெளியான உடனே பங்குச்சந்தையில் போயிங் விமானத்தின் பங்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளது.
Categories