Categories
மாநில செய்திகள்

Breaking: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு… முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் மக்களின் வீடுகளும் விளைநிலங்களும் பெரிதும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.மழையால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு ஹேக்டருக்கு தலா 20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்குவதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |