வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்போது அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்..
தமிழகத்தில் தொடர்ச்சியாக சென்னை உள்ளிட்ட பல பகுதியில் கனமழை பெய்து வருகிறது.. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் போல காட்சியளிக்கிறது.. அதுமட்டுமில்லாமல் சில இடங்களில் வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. இந்த மழைக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் பல இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார்.. மேலும் பாதிக்கப்பட்ட பகுதியை மீட்பதற்காக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்..
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.. தற்போது தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை, நிவாரண உதவிகள் பற்றி ஆலோசனை நடக்கிறது..
இந்த ஆலோசனைக்கு பிறகு ஒரு செய்தி குறிப்பு வர இருக்கிறது.. அப்போது தான் தெரிய வரும் தமிழக அரசு அடுத்த கட்டமாக எந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று.. தற்போது தலைமை செயலகம் அருகே கனமழை பெய்து கொண்டிருக்கிறது.. கடும் மழையை பொருட்படுத்தாமல் முதலமைச்சர் தலைமைச் செயலகம் வந்திருக்கிறார்.. அவசர ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது